Categories
உலக செய்திகள்

பேருந்து மீது வேன் மோதியதில் 15பேர் பலி …!!

பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பேருந்து ஒன்று பலூசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும்  கன்மேக்தரசி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த வேன்  கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது .இதனால் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து  எரிய ஆரம்பித்தது  .

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வருவதற்குள்  இரண்டு வாகனங்களும் முழுவதும்  தீயில் எரிந்து நாசமானது . இச்சம்பவத்தில்  பேருந்து மற்றும் வேனில் இருந்த 15 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டும்  பலத்த தீக்காயத்துடன்  மீட்கப்பட்டார்.

சம்பவம்குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வேனில் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்பட்ட எண்ணெய் இருந்ததே,  வாகனங்கள் இரண்டும் தீப்பிடித்து எரிவதற்கு  காரணம் என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |