Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : வெற்றிக்கு 211 ரன்கள் தேவை ….! 4-ம் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்கா 94/4 ….!!!

இந்திய அணிக்கெதிரான  முதல் டெஸ்ட் போட்டியில்  4-ம் நாள் ஆட்டமுடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களை எடுத்துள்ளது. 

இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  நடைபெற்று வருகிறது .இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றுவருகிறது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது .இதன்பிறகு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது .இதனால் 130 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது .

ஆனால் தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது .இறுதியாக 62.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணி 304 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது .இறுதியாக 4-ம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது.

Categories

Tech |