இந்தியா முழுவதும் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்த வங்கி அளித்து வருகிறது. இந்நிலையில் இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தால் டிசம்பர் 31 வரை குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக குறைத்துள்ளது. எனினும் இந்தச் சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே என்று அறிவித்துள்ளது. எனவே வீட்டுக் கடன் பெறுபவர்கள் உடனே வங்கிகளையை அணுகலாம்.