2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா இன்றும் உலக நாடுகளை விட்டபாடில்லை. அடுத்தடுத்து உருமாறி வரும் கொரோனா உலகத்தின் பேரழிவாக பார்க்கப்படுகிறது.ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகில் லட்சக்கணக்கான உயிர் இழப்புகளை பலிகொண்ட கொரோனாவால் 28 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் போராடி, அதற்கு நிரந்தர தீர்வு கான தடுப்பு மருந்து கண்டுபிடித்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்து மருத்துவத் துறைக்குப் பெரும் சவாலாக கொரோனா மாறியுள்ளது.
உலகிலேயே வல்லரசு நாடாகத் திகழும் அமெரிக்காவை சின்னாபின்னமாக்கி உள்ள கொரோனா அடுத்தடுத்து மூன்று அலைகளாக அமெரிக்கர்களை நடுங்க வைத்து, தற்போது கொரோனா நாலாவது அலையா என்று பயப்படும் அளவிற்கு அதன் தாக்கம் உள்ளது. கொரோனாவின் தாக்கத்தை உலக நாடுகள் இரண்டு ஆண்டுகள் சந்தித்து வந்தாலும் உலகிலேயே இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம் அதன் தாக்கம் இருந்துள்ளது மருத்துவ துறையை திணற வைத்துள்ளது.
நேற்று முன்தினம் மட்டும் அமெரிக்காவில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் உலக அளவில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 12 லட்சத்து 98 ஆயிரத்து 895 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவை அடுத்து பிரான்சில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் பேருக்கும், இங்கிலாந்தில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கும், ஸ்பெயினில் 99 ஆயிரம் பேருக்கும், இத்தாலியில்78,000 பேருக்கும், அர்ஜென்டினாவில் 33 ஆயிரம் பேருக்கும், துருக்கியின் 32 ஆயிரம் பேருக்கும், ஜெர்மனியில் 30 ஆயிரம் பேருக்கும், கனடாவில் 27 ஆயிரம் பேருக்கும், ரஷ்யாவில் 21 ஆயிரம் பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது