இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை அவரது பெற்றோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெயிண்டரான பாலசுப்பிரமணியம் என்பவர் இளம் பெண்ணை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாலசுப்ரமணியனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.