இந்தியாவில் 2 குழந்தைகளை பெற்றெடுத்த 36 வயதுடைய இளம்பெண் ஒருவர் திருமணம் முடிந்து 10 வருடங்களுக்கு பின்பாக ஆணாக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலுள்ள சென்னையில் வசித்து வரும் இளம் பெண் ஒருவருக்கு 27 வயதில் திருமணம் முடிந்துள்ளது. மேலும் அந்த இளம்பெண் தன்னுடைய திருமண வாழ்நாளில் 2 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து அந்த இளம் பெண் உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஆணாக மாறியுள்ளார். அதோடு மட்டுமின்றி அவர் பெற்றெடுத்த பிள்ளைகளை தன்னை அம்மா என்று கூப்பிட கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை அப்பா என்று அழைக்குமாறும் தான் பெற்றெடுத்த பிள்ளைகளை வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே ஆணாக மாறிய அந்த இளம் பெண்ணின் கணவர் அவரிடம் தற்போது நண்பன் போல் பழகி வருவது குறிப்பிடத்தக்கது.