தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி சென்னையில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இந்த சூழலில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தவகையில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதனையடுத்து கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின் 551 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் புத்தாண்டு அன்று அனைத்து கோயில்களும் இரவு திறந்திருக்கும், பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.