இந்திய அணியின் வீரர்கள் குறித்து பரத் அருண் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அளித்த பேட்டியில், ஒவ்வொரு போட்டியிலும் ஷிவம் துபே நம்பிக்கை அளித்து வருகிறார். மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கடைசி T 20 போட்டியில் முதல் ஒவரிலே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரன்களை வாரிக்கொடுத்தார்,பின்னர் சூழ்நிலைகேற்ப ஏற்பட்டும் சரிவை சமாளித்து அற்புதமாக பந்து வீசினார். அதனால் ஷிவம் துபே மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். அவருக்கு வாய்ப்பு அளித்த போதெல்லாம் அதை சரியாக பயன்படுத்தினார்.அவருக்கு அற்புதமான திறமை உள்ளது.அவர் இந்திய அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டராக உருவெடுப்பார் என்று நம்பிக்கையுள்ளது. அதனுடன் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் பந்து வீச்சில் எல்லா வகையிலும் நம்பிக்கையாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்திய அணிக்கு சிறந்த கலவை கொண்ட வீரர்களை உருவாக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.இதில் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கபட்ட போதெல்லாம் அணிக்கு உதவிகரமாக இருக்கிறார்.அவருடைய பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மூன்றிலும் அற்புதமாக செயல்படுகிறார்.மேலும் சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் மற்றும் சாஹலும் மீண்டும் இணைந்து இந்திய அணிக்கு இணைந்து பந்து விசுவார்களா ?என்று கேட்கிறீர்கள். அதற்கேற்ற சூழ்நிலை அமைந்தால் இரண்டு பேருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறினார்.
மேலும் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார்.அவருக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அற்புதமாக பந்து வீசி இடத்தை தக்க வைத்து கொன்றார்.அதனால் ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றார்.