இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பித்தது கொள்ளலாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மும்பை முழுவதும் இன்று முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ளரங்கு மற்றும் வெளிப்புற புத்தாண்டு கொண்டாடுவது தடை விதிக்கப்பட்டுள்ளது