Categories
இந்திய சினிமா சினிமா

மனைவிக்கு வெங்காய கம்மலை பரிசளித்த நடிகர் அக்‌ஷய்குமார்…..!!!!!

டிவிங்கிள் கண்ணாவுக்கு வெங்காய கம்மலை பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் பரிசளித்துள்ளார்.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கின்றது. விலை அதிகரித்து கொண்டே செல்வதால் சில உணவகங்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து தயார் செய்யும் உணவு வகைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழையால் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெங்காயத்தின்  விலை உச்சத்தில் இருக்கின்றது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் வெங்காயத்தின் விலை 150ரூபாயை தாண்டியது. மேலும் விளைச்சல் இல்லாததால் வெங்காயம் எகிப்து, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து அதிகளவு வெங்காயத்தை  இந்தியா  இறக்குமதி செய்துள்ளது.

Image result for Twinkle Khanna

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது மனைவிக்குவெங்காயத்தாள் ஒரு கம்மல் செய்து பரிசளித்தார். இதனை அவரது மனைவியான டிவிங்கிள் கண்ணா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அது இப்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |