பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் லேண்ட்ரோவர், ரேஞ்ச்ரோவர் கார்களை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தபோது அவரை சந்திப்பதற்காக பிரதமர் மோடி மெர்சிடிஸ் மேபக் என்ற சொகுசு காரில் வந்து இறங்கினார் .இது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த நிலையில் இந்த காரின் விலை 12 கோடி ரூபாய் என்று ஊடகங்கள் தெரிவித்ததால் அதற்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில் இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மெர்சிடிஸ் மேபேக்கின் விலை குறைவு தான். எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவினர் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். அந்த படைப் பிரிவுகளின் விதிகளின்படி 6 வருடத்திற்கு ஒருமுறை பிரதமர் பயன்படுத்தும் வாகனங்கள் மாற்ற வேண்டும். எனினும் எட்டு வருடங்களாக பபிரதமர் அதே கார்களை யன்படுத்தி வந்தார்.
இதனையடுத்து பிரதமரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவருடைய கார்களை மாற்ற எஸ்பிஜி படையினர் முடிவு செய்து பிரதமரின் விருப்பத்தைத் கூட பெறாமல் அவர்கள் இந்த முடிவை எடுத்தனர். பிரதமர் பயன்படுத்தி வந்த பிஎம்டபிள்யூ ரக கார் இப்போது தயாரிக்கப்படவில்லை என்பதனால் மெர்சிடஸ் கார் வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.