கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய 2-ம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையைஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி இந்த பெட்டிகள் அனைத்தும் முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது ஜனவரி 1 முதல் 39 ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்ய முடியும். மங்களூர் முத்த நாகர்கோவில் இடையேயான ரயிலில் வரும் 4-ம் தேதி முதலும், சென்னை – கோவை இடையேயான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் 14-ம் தேதி முதலும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.