Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு : இவர்களுக்கு மட்டும் விலக்கு…. கேரள அரசு அதிரடி….!!!!

கேரளா மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் சபரிமலை மக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கேரளா அரசு, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து இன்று முதல் ஜனவரி 2-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே மகரஜோதி பூஜை சபரிமலையில் இன்று நடைபெற உள்ள நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |