Categories
மாநில செய்திகள்

“இவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு குறைவாவே உள்ளது”….. மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்….!!

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸ் பரவி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது, கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு குறைவாகவே உள்ளது. மேலும் தடுப்பூசி போட்ட அவர்களுக்கு ஒமைக்ரான் வந்தாலும் குறுகிய காலத்தில் அவர்கள் நலம் பெறுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மக்களின் முழு ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதித்த 45 பேரில் தற்போது 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |