Categories
தேசிய செய்திகள்

4 முறை தடுப்பூசி…. துபாய்க்கு செல்ல இருந்த பெண்ணுக்கு…. காத்திருந்த அதிர்ச்சி….!!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நான்கு முறை தடுப்பூசி செலுத்தி கொண்ட பெண்ணிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து துபாய் விமான நிலையத்திற்கு செல்ல  இருந்த 30 வயதான பெண்ணுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், அவர் பல்வேறு நாடுகளில் நான்கு முறை தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர் என்பதுதான். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்தூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |