கடந்த 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் உளவு பார்த்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்தியர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரிலுள்ள மெக்வால் என்னும் கிராமத்தில் குல்தீப் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 29 ஆண்டுகள் லாகூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவருடைய சிறைவாசம் நிறைவடைந்ததையடுத்து குல்தீப் சிங் தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அவ்வாறு 29 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து தனது சொந்த கிராமத்திற்கு சென்ற குல்தீப் சிங்கை அவரது குடும்பத்தினர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளார்கள்.
இதுகுறித்து குல்தீப் சிங் கூறியதாவது, நான் என்னுடைய கிராமத்திற்கு வருவேன் என்று துளியும் நினைத்துப் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தான் மறுபிறவி எடுத்தது போல உணருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.