தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் ரூ.237 கோடியில் 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ராஜப்பா பூங்கா, சரபோஜி சந்தை உள்ளிட்டவை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து ரூ.1,229.83 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு பேசிய ஸ்டாலின், காவிரி உரிமையை காப்பாற்றிய இயக்கம் திமுக அரசுதான். மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.