Categories
தேசிய செய்திகள்

“அவனே இல்ல நான் எதுக்கு வாழனும்”…. விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம்  மக்கிமனே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரும், வடரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த சாந்தினி என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டார் குடும்பத்தினருக்கும் தெரியவந்து பெற்றோர்கள் காதலரின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். இதனால் மனமுடைந்த ராஜேஷ் கடந்த 23-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு காதலன் ராஜேஷ் உயிரிழந்ததை அறிந்த இளம்பெண் சாந்தினி அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து தன் காதலன் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாத இளம்பெண் சாந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |