பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் நாகேந்திரன்-மஞ்சுளாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மஞ்சுளாதேவி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து மஞ்சுளாதேவி தனது வீட்டிற்கு நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
அதன்பிறகு மர்ம நபர்கள் மஞ்சுளாதேவியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மஞ்சுளாதேவி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.