பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாவளம் பகுதியில் பெரமன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அருணாச்சலம் என்பவருக்கும் இடையே பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து பெரமன் தண்ணீர் இறைத்த போது அவரை அருணாச்சலம் மற்றும் அவரது உறவினர்கள் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பின்னர் இது பற்றி பெரமன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் அருணாச்சலம் மற்றும் அவரின் உறவினர்கள் ராஜன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்துள்ளனர். இதே போல் பெரமன் அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்கியதாக நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் பெரமன், செல்வம், ராஜேந்திரன் மற்றும் அல்லிமுத்து ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அல்லிமுத்துவை கைது செய்துள்ளனர்.