சுறாக்களுக்கு சாண்டா கிளாஸ் உடையணிந்து ஊழியர் உணவளித்ததை பார்வையாளர்கள் ஆச்சிரியோத்தோடு கண்டு மகிழ்ந்தனர்.
பிரேசில் நாட்டில் உள்ள மீன் கண்காட்சியகத்தின் ஊழியர் ஒருவர் சுறாக்களுக்கு இடையே சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து நீந்தினார்.இந்த மீன் கண்காட்சியகம் ரியோ டி ஜெனிரோவில் உள்ளது. இது தென்அமெரிக்காவின் மிகப்பெரிய மீன் கண்காட்சியகம் ஆகும்.
அந்த கண்காட்சியகத்தில் பணிபுரியும் வால்மர் டி அகுவார் சால்வடோர் என்ற ஊழியர் சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து,கண்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நீர்த் தொட்டிக்குள் நீந்தி அங்குக் காட்சிப்படுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த பல வகையான சுறாக்களுக்கு அவர் உணவளித்தார். அப்பொழுது அங்கு இருந்த சிறுவர்கள் சுறாக்களுக்கு இடையே நீந்திய சாண்டா கிளாசுடன் பல புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.