Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தண்ணிர் இல்லாமல் சிரமம்” போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள்… அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை…!!

சீராக குடிநீர் வழங்கக்கோரி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின்  முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் 1000-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 5 நாட்களுக்கு  1 முறை மட்டுமே குடிநீர்  விநியோகிக்கப்படுகிறது . இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கையில்  காலிக்குடங்களுடன் வட்டார  வளர்ச்சி அலுவலகத்திற்கு  முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சிவார்த்தை நடத்தினர். அந்த பேச்சிவார்த்தையில்   உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு  பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Categories

Tech |