Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இலவசமாக…. 150 இடங்களில்…. ஈஷா சூப்பர் அறிவிப்பு…!!!!

ஈஷா அறக்கட்டளையின் சார்பாக தமிழகம் முழுவதும் 150 இடங்களில் ஈஷா இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் 150 இடங்களில் ஈஷா அறக்கட்டளை சார்பாக இலவச யோகா கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. அதன்படி ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஈஷா யோகா வகுப்பு நடைபெற உள்ளது. ஈஷா தன்னார்வலர்கள் இந்த வகுப்பை நேரில் நடத்த உள்ளார்கள்.

இதில் சூரிய சக்தி என்ற எளிய சக்தி வாய்ந்த யோக பயிற்சி கொடுக்கப்படும். இந்த பயிற்சியில் ஏழு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். உங்களுடைய இடத்திற்கு பக்கத்திலேயே நடக்கும் இந்த வகுப்பில் பங்கேற்பதற்கு Isha.co/SSRD என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவுசெய்ய  உதவி தேவைப்பட்டால் 83000 99555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |