Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்க வீட்டிற்கு மட்டும் வழங்கவில்லை” பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் இணைப்பு வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒண்டிபொம்மன்பட்டியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில வீடுகளுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பூசாரிபட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சுக்காம்பட்டி ஊராட்சி தலைவர் முனியப்பன், ஊராட்சி செயலாளர் குமரவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சிலர் தங்கள் நிலத்தின் வழியாக குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் தான் பணி பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே ஒப்புதல் கடிதம் வாங்கியபிறகு விரைவில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |