மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிகாமன்வாடி பகுதியில் கட்டிட தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கட்டிட வேலைகளை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் மின் மோட்டாரை இயக்கிய போது எதிர்பாராதவிதமாக மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.