சென்னையில் ஒமைக்ரான் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. புத்தாண்டில் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்காணிப்பதற்கு மாநகராட்சி மற்றும் காவல்துறையை அடங்கிய குழு ஒவ்வொரு மண்டலத்திற்கும் போடப்பட்டுள்ளது. வார்டு வாரியாக கண்காணிக்கப்படும்.
மேலும் சென்னையில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும். மக்கள் தடுப்பூசியை விரைந்து செலுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முக கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.