குஜராத் மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் 5 வயது மகள் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுஜித் சாகேட்(27) என்பவரை கைது செய்துள்ளனர். அந்தச் சிறுமிக்கு அவர் சாக்லேட் தருவதாக கூறி மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் மீது போலீசார் போக்சா உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரணை செய்த சிறப்பு கோர்ட் நீதிபதி, குற்றவாளி சுஜித் சாகேட் தனது மீதமுள்ள ஆயுட்காலம் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி தனது காலனியை நீதிபதியை நோக்கி வீசினார். அது தவறி காட்சி கூண்டின் அருகில் விழுந்தது. இந்தச் சம்பவம் கோட்டில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அருகிலிருந்தவர் அந்த வாலிபரை பிடித்து சிறையில் அடைக்கப்பட்டார்.