Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய மது…. தெரியாமல் ஆசிட்டை குடித்த 3 பேரின் நிலைமை?…. பெரும் சோகம்….!!!!

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் பாபிராம் ரியாங் (38) வசித்து வருகிறார். இவரது மனைவி தனது குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது மகனின் உடல்நிலை சரியில்லாதது குறித்து பாபிராமிடம் கூறியுள்ளார்.

அதன்பின் பாபிராம் அங்கு சென்றுள்ளார்.
அங்கு சம்பவத்தன்று இரவு 10 பேர் மது குடித்து கொண்டிருந்தபோது பாபிராமும் அதில் கலந்து கொண்டார். இந்த நிலையில் குடிபோதையில் மது என நினைத்து 3 பேர் ஆசிட் குடித்துள்ளனர். அவர்கள் சச்சீந்திரா ரியாங் (22), ஆதிராம் ரியாங் (40) மற்றும் பாபிராம் ரியாங் (38) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து காவல் அதிகாரி ரத்னா கூறும்போது, ரப்பர் ஷீட்டுகளுக்காக வைத்திருந்த ஆசிட்டை தெரியாமல் மதுபானம் என தவறுதலாக நினைத்து 3 பேரும் குடித்துள்ளனர் என தெரிவித்து உள்ளார். அதன்பின் நேற்று காலை அவர்கள் 3 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனாலும் அவர்கள் உயிரிழந்து விட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |