Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் கோவில்கள்”…. பாதுகாக்க குழு வந்தாச்சு…. வெளியான தகவல்….!!!

முஸ்லிம் சமூகத்தினர் அதிமாக வசிக்கும் பாகிஸ்தானில் முதன் முறையாக சிறுபான்மை ஹிந்துக்களின் கோவில்களை பாதுகாக்க இந்து மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் கொண்ட குழுவை அரசு நேற்று நியமித்துள்ளது. சீக்கியர்களின் புனித தலங்களை பாதுகாக்க ஏற்கனவே பாகிஸ்தான் சீக்கிய குருத்வரா நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பாகிஸ்தான் ஹிந்து கோவில் நிர்வாகக் குழுவை மத விவகாரங்கள் அமைச்சகம் நியமித்துள்ளது.

இக்குழுவின் முதல் கூட்டம் மத விவகாரங்கள் துறை அமைச்சர் பீர் நூர்-அல்-ஹக் கத்ரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானில் உள்ள ஹிந்து கோவில்கள் குறித்த விஷயங்களைக் இனி இந்த குழு கவனிக்கும் என்று அவர் கூறினார். ஹிந்து சமூகத்தினர் கோரிக்கையை ஏற்று குழுவை நியமித்து இருப்பதன் மூலமாக பாகிஸ்தான் அரசு வரலாறு படைத்துள்ளது என்று அக்குழுவின் தலைவர் கிருஷ்ண சர்மா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |