Categories
மாநில செய்திகள்

சென்னையில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்…. என்ன நடக்கப் போகிறது….!!!

கட்டப்பஞ்சாயத்துகளை தடுப்பதற்காக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை தலைமையில் சிறப்பு பாதுகாப்பு படை அமைத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் தொழில் நிறுவனங்களில் கட்டப்பஞ்சாயத்து தாரர்கள் சென்று பணம் கேட்டு தொல்லை தருவதாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளதால் கட்டப்பஞ்சாயத்துகளை தடுக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை தலைமையில் சிறப்பு படை அமைத்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரையை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அயோத்தியா குப்பம், வீரமணி உள்ளிட்ட பல ரவுடிகளின் உயிரை வெள்ளத்துரை தோட்டாக்கள் பறித்திருக்கிறது.

Categories

Tech |