கடற்கரையின் பாறைகளில் பதிவாகியிருந்தது டைனோசர்களின் கால்தடம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சதர்ன் வேல்ஸ் கடற்கரையில் அடுத்தடுத்து கால்தடங்கள் போன்ற அமைப்பு இருந்தது. கடந்த வருடம் பார்க்கப்பட்ட இந்த அமைப்புகளை லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதில் இவை 200 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த சரோபோடோமார்ப் என்ற டைனோசரின் கால்தடம் என்பது உறுதியாகியுள்ளது. அதாவது நீண்ட கழுத்தைக் கொண்ட இந்த வகை டைனோசர்கள் தாவர உண்ணிகளாக இருந்ததும், வேல்ஸ் கடல்பகுதியில் அவை உலா வந்ததும் தெரியவந்துள்ளது.