Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டை இணைத்தால் 1.3 லட்சம் கிடைக்குமா?…. ப்ளான் போட்ட மத்திய அரசு….!!!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஜன் தன் கணக்குகளில் குறைந்தபட்சம் இருப்புத்தொகை இருக்க வேண்டியது அவசியம் கிடையாது. இதனால் அபராதமும் வசூலிக்கப்படாது. இதுபோன்ற பல்வேறு சலுகைகள் ஜன் தன் வங்கிக் கணக்கில் கிடைக்கின்றது. இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே கார்டுகள் வழங்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக இத்திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1 லட்சம் ரூ வரையில் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. கடந்த 2018 ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு பின் ஜன் தன் கணக்கு திறந்தவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். இதுமட்டுமின்றி பொது காப்பீடாக 30,000 ரூ கிடைக்கிறது. ஜன் தன் வங்கிக் கணக்குதாரர்களுக்கு இந்த 1.3 லட்சம் ரூ வரையிலான பலன்களைப் பெறுவதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. அவர்கள் தங்களுடைய ஆதார் கார்டை ஜன் தன் வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் கிடைக்காது.

இதனிடையில் ஆதார் கார்டில் பதிவு செய்த மொபைல் நம்பரும் இதற்கு தேவைப்படும். அதன்பின் மொபைல் நம்பருக்கு வரக்கூடிய ஓடிபி எண்ணைப் பதிவிட வேண்டியிருக்கும். ஜன் தன் வங்கிக் கணக்கில் ஓவர் டிராஃப்ட் வசதியும் இருக்கிறது. இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் 10,000 ரூ வரையில் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஜன் தன் திட்டம் வந்த பின் பெண்கள் அதிக அளவில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |