தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை முடங்கியது.பருவமழை முடிந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் இன்று சென்னையில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதில் சென்னை டி நகர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், மதுராந்தகம், வாலாஜா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, கேளம்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இன்னும் ஒரு மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.