சென்னையில் கடந்த இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இன்னும் ஒரு மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் திடீரென்று மழை கொட்டி தீர்த்தத்திற்கு என்ன காரணம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். அதில், தமிழகத்தை ஒட்டி கடலில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காலை தமிழக கரையை நோக்கி வந்து விட்டது. அதனால் தான் தற்போது கனமழை பெய்து வருகிறது என்று கூறியுள்ளார்.