Categories
மாநில செய்திகள்

Omicran: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்…? நாளை முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த செப்டம்பர் முதல் கல்லூரி, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் இந்தியாவில் புகுந்து புதிய தலைவலியைஉருவாக்கி உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் புகுந்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது .

இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமலுக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல்வர் முக ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு இரவு நேர ஊரடங்கு, புதிய கட்டுப்பாடுகள் போன்ற கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |