கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பொக்லைன் எந்திர டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் பகுதியில் மிக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமராஜ் என்ற மகன் உள்ளார். இவர் பொக்லைன் எந்திரத்தில் சொந்தமாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே உதயசெல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காமராஜ் தூத்துக்குடியில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வரும் மாணவியிடம் நெருங்கி பழகியுள்ளார்.
இதனையடுத்து காமராஜ் தனக்கு திருமணம் ஆகவில்லை என கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து கல்லூரி மாணவி தனது உறவினர்களிடம் கதறி அழுதுள்ளார். இதனைத தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.