சென்னையில் இன்று திடீரென்று பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மெட்ரோ ரயில் நிலையத்திலும் கூட்டம் அலை மோதுகிறது. பல்வேறு பகுதிகளிலும் கடைகலுக்குள் மழை நீர் புகுந்தது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போடப்பட்டிருந்த கூடாரங்கள் காற்றில் பறந்து சென்றன. இதனை தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக நிலப்பகுதியை நோக்கி மேலடுக்கு சுழற்சி வேகமாக நகர்ந்து வருவதால் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்றும், அதிகபட்சமாக எம்ஆர்சி நகரில் 13 மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.