திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திரவியபுரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்சன் என்ற மகன் உள்ளார். இவர் நாசரேத் மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இதேபோன்று நாசரேத் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மகள் உள்ளார். இவர் நாசரேத் ரயில்வே கேட் அருகில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அம்சன் மாலதி வேலை பார்த்த கடைக்கு எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி சென்றுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இருவரும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் மீரான்குளத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரும் நாசரேத் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.