Categories
மாநில செய்திகள்

அடடே…! ரூ.28.24 கோடியில் பேருந்து நிலையம் திறப்பு…. முதல்வர் அசத்தல்…!!!!

திருச்சியில் ரூ. 604.10 கோடி மதிப்பீட்டிலான 532 புதிய திட்டப் பணிகளுக்கு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், திருச்சி முழுவதும் அமைச்சர்கள் மக்களிடம் பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை பெற்றுள்ளனர். மக்களிடம் மனுக்களை பெற்று அதை ஆராய்ந்து அதற்கான தீர்வு காணப்பட்டுள்ளது. திருச்சியில் புதிய பாலம், வெளிவட்ட சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூபாய் 28.24 கோடியில் மேம்படுத்தப்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் தரை தளத்தில் 30 பேருந்துகள் நிறுத்தம் வசதியும், 11 கடைகளும், முதல் தளத்தில் 17 கடைகள், காவல் உதவி மையங்கள் உள்ளன.

Categories

Tech |