11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏலக்ட்ரீசியனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியனான இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சரண்ராஜ் பேளுக்குறிச்சியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவத்தன்று மாணவி வீட்டில் தனியாக இருக்கும் சமயத்தில் சரண்ராஜ் அங்கு சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பேளுக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து சரண்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.