வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வார நாட்களில் நெரிசல் மிகுந்த இடங்களில் ஐந்து நிமிட இடைவெளியிலும், மற்ற நேரத்தில் பத்து நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
Categories