சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 6 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை ஒய்ந்து பனிக்காலம் தொடங்கிய நிலையில் இன்று சென்னையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சென்னையில் பிற்பகல் முதல் 6 மணி நேரத்திற்கும் மேலாக அடைமழை பெய்து வருகின்றது. தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கொங்கு ரெட்டி சுரங்கபாதை, மேட்லி சுரங்கபாதை, அரங்கநாதன் சுரங்கபாதை, ஆர்.பி.ஐ சுரங்கபாதை உள்ளிட்ட சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் 6 மணிநேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது சென்னை வாசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.