மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் புத்தாண்டு முதல் ஒரு சில பொருட்களின் விலை உயரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆயத்த ஆடைகள், காலணிகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் மீதான மத்திய நேரடி வரிகள் வாரியம் வரியை உயர்த்தி உள்ளது. இதனால் சில்லரை வர்த்தகத்தில் ஜனவரி 1 முதல் பொருட்களின் விலை உயரும்.
அதனைத் தொடர்ந்து ரூ.1000 க்கு மேற்பட்ட விலை உள்ள பொருட்களின் மீதான வரி 5% இருந்து 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஓலா ஊபர் போன்ற அப்கள் மூலம் ஆட்டோ புக்கிங் செய்தால் 5% வரி வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சாலைகளில் நேரடியாக ஆட்டோவில் சென்றால் வரி கிடையாது. இந்த வரி விதிப்பு புத்தாண்டு முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.