சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. மேலும் 6 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நான்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று அமைச்சர் ராமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சென்னையில் எம் ஆர் சி நகர், வடபழனி, நத்தம் பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. 4 சுரங்கப்பாதைகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. கனமழை நின்றவுடன் சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீர் விரைந்து வெளியேற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.