Categories
தேசிய செய்திகள்

ஓட்டுனர் உரிமத்திற்கான மருத்துவச் சான்றிதழ்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

கேரளாவில் ஆயுர்வேத பட்டம் பெற்ற பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு ஓட்டுனர் உரிமத்திற்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், இதுவரை அலோபதி மருத்துவர்கள் மற்றும் ஆயுர்வேத முதுகலை பட்டதாரிகளின் மருத்துவ சான்றிதழ் மட்டுமே பரிசளிக்கப்பட்டது.

தற்போது ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்கள் மருத்துவர் சான்றிதழ் ஓட்டுனர் உரிமத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மருத்துவ சான்றிதழ்கள் வழங்க எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு நிகரான தகுதிகள் உள்ளது என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |