இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் சமையல் எண்ணெயின் விலையை குறைத்துள்ளது என்று எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமையல் எண்ணெயின் விலை பண்டிகை காலத்தில் நுகர்வோர் நலன் கருதி குறைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்சு பாண்டே கூறியது இந்தியாவின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் சமையல் எண்ணெய் விலையை 10 முதல் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது இதன்மூலம் 30 முதல் 40 வரை குறைத்துள்ளது. மேலும் குறைக்கப்பட்ட விலையில் சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறதா என்று மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.