Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. முன்பதிவில்லா ரெயில் பயணிகளுக்கு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே 41 ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை மீண்டும் இணைத்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கி இந்த ரயில்களில் பயணிகள் பயணம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்- திருப்பதி விரைவு ரயில், கோவையில் இருந்து மங்களூர் செல்லும் ரயில், நாகர்கோவில் – கோவை உள்ளிட்ட 41 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக விரைவு ரயில்களில் இருந்து முன்பதிவில்லா பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் நீக்கப்பட்டு சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |