2021-22 ஆண்டிற்கான ஜிஎஸ்டி வருடாந்திர கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ட்விட்டரில் 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி 9 படிவம் மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவம் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியிலிருந்து 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவம் என்பது ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ள வரி செலுத்துவோர் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்ய வேண்டிய கணக்கு ஆகும். ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் முதல் ஈட்டும் தொழில்கள் ஜிஎஸ்டி-9 வருடாந்திர கணக்கு கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் தொழில்கள் மற்றும் ஜிஎஸ்டி-9சி படிவம் தாக்கல் செய்தால் போதுமானது.