வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் எம்ஆர்சி நகர், வடபழனி, நந்தனம் பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக 4 சுரங்கப்பாதைகள் மழைநீரால் மூழ்கியுள்ளன. மேலும் கனமழை நின்றவுடன் சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீர் வரைந்து வெளியேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.