வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.
இதன் விளைவாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 2,900 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.